(I.P.L.) இது பிள்ளைகள் லீக்!

 பிள்ளைகள் ஆடும் கிரிக்கெட்டு - ஒரு பிய்ந்த பலகையே விக்கெட்டு! 
 (I.P.L.) இது பிள்ளைகள் லீக்!

 பிள்ளைகள் ஆடும் கிரிக்கெட்டு - ஒரு
 பிய்ந்த பலகையே விக்கெட்டு!
 
 டிக்கட்டேதும் கிடையாது - காண
 இக்கட்டேதும் கிடையாது!
 
 விதிகள் அதிகம் தெரியாது - கெட்ட
 சதிகள் அறவே புரியாது!
 
 அம்பயர் பிக்கலும் கிடையாது - இம்சை
 ரம்பையர் குலுக்கலும் கிடையாது!
 
 நாட்டம் எல்லாம் ஓட்டந்தான் - விக்கெட்
 வீழினும் அடையார் வாட்டந்தான்!
 
 விக்கெட்டெடுத்த வீரனிடம் - வீண்
 கொக்கரிப்பெல்லாம் கிடையாது!
 
 வெய்யோன் செஞ்சுரி முந்துகிறான் - மலை
 வேம்பின் அடியில் குந்துங்கள்!
 
 கோடை பிறந்தால் கூடுவரே - தம்
 பள்ளிகள் திறந்தால் ஓடுவரே!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com